தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம்
EMPLOYEES' PROVIDENT FUND ORGANISATION
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்,
இந்திய அரசு
வாடிக்கையாளர், பணியாளர் மற்றும் EPF உறுப்பினர்கள் கவனத்திற்கு.
உங்கள் பங்களிப்பை செலுத்துவதற்கு
UAN உடன் ஆதார் எண் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.
அனைத்து முதலாளிகள் மற்றும் ஊழியர்களின் கவனத்திற்கு 2020ஆம்
ஆண்டின் சமூகப் பாதுகாப்புத் தொடர்பான பிரிவு 142இன் படி,
பயனாளி
தனது அடையாளத்தை அல்லது அவரது குடும்ப
உறுப்பினர்கள் அல்லது தன்னை சார்ந்தவரின் அடையாளத்தை நிறுவ
வேண்டும் என்னும் கட்டளையை நடைமுறைபடுத்தப்படுகிறது.
அதன்படி 01.06.2021 முதல் UAN உடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு,
சரிபார்க்கப்பட்ட ஊழியர்களுக்கு மட்டும் ECR அனுமதிக்கப்படும்.
மேற்கூறியவற்றை கருத்தில் கொண்டு அனைத்து முதலாளிகளும்
தங்கள் ஊழியர்கள் அனைவரின் UAN உடன் ஆதார் எண்
இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்
படுகிறார்கள், இதனால் எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் ECR
தாக்கல் செய்ய முடியும். இது தொடர்பாக அனைத்து ஊழியர்களும்
தேவையான விவரங்களை தங்கள் முதலாளிகளுக்கு அளித்து
ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் - 1
No comments:
Post a Comment