மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
முதல்-அமைச்சருக்கு கோரிக்கை
╰•★★ PLEASE CLICK HERE FOR MORE NEWS ★★•╯
மாற்றுத்திறனாளிகள் பகுதிநேர ஆசிரியர் சங்க மாநில தலைவர் ஜலீல் முகைதீன் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையில் கடந்த 2012-ம் ஆண்டு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் பகுதி நேர ஆசிரியர்களாக 16 ஆயிரத்து 549 பேர் நியமிக்கப்பட்டார்கள்.
இவர்களில் 200 பேர் மாற்றுத்திறனாளிகள். 2008-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி, 2 ஆண்டுகளுக்கு மேல் மாற்றுத்திறனாளிகள் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்தால் அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க உத்தரவிட்டார். இந்த அரசாணையில் தவறு இருப்பதாக கூறி பின்னர் வந்த அரசு, மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய முடியாது என பள்ளிக்கல்வித்துறை மறுத்துவிட்டது.
இதுதொடர்பாக மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு, பதில் அளிக்கும்படி பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை பள்ளி கல்வித்துறை கோர்ட்டு உத்தரவுக்கு எவ்வித முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதில் முதல்-அமைச்சர் தலையிட்டு "மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை" பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment