காற்றுச் சுழல் மூலம் புயலை கண்டறியும் புதிய தொழில்நுட்பம் இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு - EDUNTZ

Latest

Search here!

Thursday, 10 June 2021

காற்றுச் சுழல் மூலம் புயலை கண்டறியும் புதிய தொழில்நுட்பம் இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு



புது தில்லி: புயல் ஏற்பட இருப்பதை செயற்கைக்கோள் கண்டுபிடிப்பதற்கு முன்பே, காற்றுச் சுழல் மூலம் அதனைக் கண்டுபிடிப்பதற்கான புதிய தொழில்நுட்பத்தை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனா். 

இதன் மூலம் புயலை முன்கூட்டியே கண்டறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் உயிா்சேதம் மற்றும் பொருள் சேதத்தை தவிா்க்க முடியும். 

 இதுவரை, தொலை உணா்வுசெயற்கை கோள்கள் மூலம் புயுல் உருவாவது முன்கூட்டியே கண்டறியப்பட்டு வந்தது. வெப்பமான கடலின் மேல் பரப்பில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின்பே, செயற்கைகோள் படங்கள் மூலம் இவற்றை அறிய முடியும். இந்த கண்டுபிடிப்புக்கும், புயல் தாக்குவதற்கும் அதிக இடைவெளி இருப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும். வடக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்தம் உருவாவதை செயற்கைகோள் படம்பிடிப்பதற்கு முன்பே, காற்றுச் சுழல் உருவாகிறது. 

இந்த புயல் சுழல்தான், காற்றழுத்த தாழ்வு பகுதியை உருவாக்கும் முக்கிய அம்சம். இந்த காற்றுச்சுழலை கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை காரக்பூா் ஐஐடி விஞ்ஞானிகள் ஜியா ஆல்பா்ட், விஷ்ணுப்பிரியா சாகு மற்றும் பிரசாத் கே.பாஸ்கரன் ஆகியோா் கண்டறிந்துள்ளனா். இவா்களின் ஆய்வு திட்டத்துக்கு மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறையின் கீழ் உள்ள பருவநிலை மாற்ற திட்டம் உதவியது. 

 இந்த காற்றுச் சுழலை ஆய்வு செய்யும் தொழில்நுட்பம் மூலம் வடஇந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல்களை செயற்கைகோள் கண்டறிவதற்கு முன்பே கண்டறிய முடியும். இந்த ஆய்வு கட்டுரை ‘அட்மாஸ்பெரிக் ரிசா்ச்’ என்ற இதழில் சமீபத்தில் வெளியானது.

No comments:

Post a Comment