பாஸ்டேக்' அட்டை வழங்குவதாக சுருட்டல்: ஆணையம் எச்சரிக்கை - EDUNTZ

Latest

Search here!

Wednesday, 9 June 2021

பாஸ்டேக்' அட்டை வழங்குவதாக சுருட்டல்: ஆணையம் எச்சரிக்கை

பாஸ்டேக்' அட்டை வழங்குவதாக கூறும், ஆன்லைன் மோசடி விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரித்துள்ளது.


சுங்கச்சாவடிகளில் வாகனம் காத்திருப்பதை தவிர்க்க, 'பாஸ்டேக்' திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கான மின்னணு அட்டை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், www.ihmcl.co.in என்ற இணையதளம் மற்றும் my Fastag செயலி மூலம் பெறலாம்.


கார், இலகு ரக வாகனங்களுக்கு குறைந்தபட்சம், 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 'பாஸ்டேக்' மின்னணு அட்டையை, வாகன முன்பக்க கண்ணாடியில் ஒட்டிக்கொண்டால், சுங்கச்சாவடிகளை கடக்கும் போது, அங்குள்ள கருவி வாயிலாக, சுங்க கட்டணம், வங்கி கணக்கில் இருந்து கழித்துக் கொள்ளப்படும். 

இதுதொடர்பான குறுஞ்செய்தி, பதிவு செய்யப்பட்ட மொபைல்போன் எண்ணுக்கு வந்து சேரும்.இந்நிலையில், 'ஆன்லைன்' வாயிலாக, 'பாஸ்டேக்' அட்டை வழங்கப் படுவதாக, கூறப்படும் விளம் பரங்களை நம்பி, பலர், ஆன்லைனில் பணம் கட்டி ஏமாறுகின்றனர்.'ஆன்லைன் வாயிலாக, யாரும் பணம் கட்டி ஏமாற வேண்டாம்' என, ஆணையம் எச்சரித்துள்ளதுடன், சந்தேகம் இருப்பின், 1033 என்ற, அவசர கட்டுப்பாட்டு அறைக்கும், etc.nodal@ihmcl.com. என்ற, மின்னஞ்சல் முகவரியிலும் புகார் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment