இன்ஜினியரிங் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு : தனியார் பல்கலைகள் அறிவிப்பு - EDUNTZ

Latest

Search here!

Thursday, 10 June 2021

இன்ஜினியரிங் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு : தனியார் பல்கலைகள் அறிவிப்பு

இன்ஜி., நுழைவு தேர்வு பல்கலைகள் அறிவிப்பு 


பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினி யரிங் படிப்புகளில் சேர, தமிழகத்தில் உள்ள தனியார் பல்கலைகள், நுழைவுத் தேர்வுகளை அறிவித்துள்ளன. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வில் கட்டா யம் தேர்ச்சி பெற வேண்டும். மத்திய அரசின் ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் சேர, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுகளுக்கு, தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறது. 


இந்நிலையில், தமிழகத்தில் உள்ள தனி யார் பல்கலைகள், இன்ஜினியரிங் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு களை அறிவித்துள்ளன. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், முன்னணி பல்கலைகளில் பி.டெக்., படிப்பில் சேர, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண் டும். பெரும்பாலான பல்கலைகளில், இந்த மாதம் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 

சத்யபாமா நிகர்நிலை பல்கலை, ஹிந்துஸ் தான் நிகர்நிலை பல்கலை, எஸ்.ஆர்.எம்., பல் கலை, தனலட்சுமி சீனிவாசன் பல்கலை போன் றவை, நுழைவுத் தேர்வுகளை அறிவித்துள்ளன. இந்த பல்கலைகளில், பி.டெக்., படிக்க விரும் பும் தமிழக பிளஸ் 2 மாணவர்கள், அந்தந்த பல்கலைகளின் நுழைவுத் தேர்வுகளை எழுதி, தேர்ச்சி பெற வேண்டும்

No comments:

Post a Comment