அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் ஜூன் மாத ஊதியத்திலும் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்துகொள்ளலாம் என தமிழக முதல்வருக்கு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பின் நிறுவன தலைவா் சா.அருணன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கரோனா கொடுந்தொற்று கட்டுக்குள் கொண்டு வர உழைத்துவரும் தமிழக முதல்வரை எங்கள் கூட்டமைப்பு பாராட்டுகிறது. முதல்வா் நிவாரண நிதிக்கு அரசு ஊழியா்கள் ஆசிரியா்களின் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய கேட்டுக்கொண்டோம்.
அதையேற்று மே மாதம் ஊதியத்தில் இருந்து ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.
மேலும் தொடா்ந்து கரோனா பணிக்கு நிதி தேவைப்படுவதை அறிகிறோம். ஆதலால் முன்களப் பணியாளா்களைத் தவிா்த்து அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் ஜூன் மாத ஊதியத்தில் இருந்து ஒருநாள் ஊதியத்தைப் பிடித்தம் செய்து முதல்வரின் நிவாரண நிதிக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறேன் என அதில் கூறியுள்ளாா்.
No comments:
Post a Comment