தனிமை உணர்வைத் தவிர்ப்பது எப்படி?
╰•★★ PLEASE CLICK HERE FOR MORE NEWS ★★•╯


பரபரப்பான உலகில் அனைவரும் வீட்டு வேலை கள், அலுவலக பணிகள், இதர விஷயங்கள் என்று ஓடிக்கொண்டே இருக்கிறோம். அடுத்தவரை திரும்பிப் பார்க்கக் கூட பலருக்கு நேரம் இருப்ப தில்லை. இப்படிப்பட்ட வாழ்க்கையில் பல சமயங்களில் மனதில் ஒருவித வெறுமை ஏற்படுவதை உணர்ந் திருப்போம். அந்த நேரங்களில் மனம் எந்த விஷயத் திலும் ஈடுபாடு கொள்ளாமல், வெறுமையாக மாறி விடும். யாருடனும் பேசவோ அல்லது பழகவோ தோன் றாது. குறிப்பாக, கொரோனா லாக்டவுன் காலகட்டங் களில் வீட்டுக்குள்ளேயே அடைந்துக் கிடைக்கும் போது உருவான மன நெருக்கடியால் பலர் பாதிக்கப் பட்டுள்ளனர். அத்தகைய சூழலை கடந்து செல்வதற் கான எளிதான வழிகளை இங்கே காண லாம். 

சூழலை ஏற்றுக்கொள்ளுங்கள் 

அனைவரது வாழ்க்கையிலும் இவ்வாறான நெருக்கடிகள், குறிப் பிட்ட காலகட்டங்களில் ஏற்படுவது சகஜம் என்பதை மனதளவில் ஏற்றுக்கொள்ளுங்கள். தொடர்ச்சி யாக வெறுமை உணர்வுகளில் சிக்கித் தவிப்பது, பிரச்சினையை அதிகப்படுத்தும். அதனால், நிலைமையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு எவ்வித சிந்தனைகளும் இன்றி அமைதியாக இருக்க முயற்சிப்பதே சிறந்த வழியாகும். 

தியானம் செய்யுங்கள் 

ஓரிடத்தில் அமைதியாக சில நிமிடங்கள் அமருங்கள். அந்த சமயத்தில், எவ்வித உணர்வு தோன்றினாலும் அதைப் பெரிதுபடுத்தாமல், மனதின் இயக்கத்தை அமைதியாக கவனிக்கப் பழகுங்கள். சூழலை எப்படி சரி செய்வது என்பதை பற்றி சிந்திக்கக்கூடாது. மனதின் இயக்கத்தை ஒரு பார்வையாளராக இருந்து அமைதி யாக கவனித்துக் கொண்டிருப்பதே போதுமானது, 

இசையை கேளுங்கள் 

'மனதின் துயரங்களுக்கு மாமருந்து இசை' என்ற கருத்து முற்றிலும் உண்மை. மனம் அமைதியற்ற சூழலில் இருக்கும்போது, விருப்பமான இசையை கேட்பது அமைதியை ஏற்படுத்தும். அமைதியான மன நிலை உருவாக, இசையை விட நல்ல மருந்து வேறு இல்லை. உங்களுக்கு பிடித்த பாடலை கண்களை மூடி, கொஞ்ச நேரம் கேட்கலாம். 

நடைப்பயிற்சி செய்யுங்கள் 

மனதில் வெறுமை ஏற்படும் சமயங்களில் வீட்டுக் குள்ளேயே அமர்ந்திருப்பது மன அழுத்தத்தை அதி கரிக்கச் செய்யும். அதனால், குறைந்தபட்சம் மாடியில் கொஞ்ச நேரம் காற்றாட அமர்ந்திருப்பது, காலாற நடப்பது என்று கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் செய்யலாம். வெளிக்காற்றை சுவாசிக்கும் போது, மனதின் இறுக்கம் அகன்று விடும். 

நண்பர்களிடம் பேசுங்கள் 

மனதில் சற்றே அமைதி ஏற்பட்டவுடன், நெருங்கிய நண்பர்களிடம் தொலைபேசியிலோ அல்லது நேரில் சந்தித்தோ பேசலாம். மற்றவரிடம் மனம் விட்டு அன்பாக பேசுவதால், மனம் லேசாகும். நம்மைச் சுற்றி அன்பான மனிதர்கள் இருப்பதை உணர்வ தும் மன வெறுமைக்கு நல்ல மருந்தாகும். 

ஆன்லைனில் கற்றுக்கொள்ளுதல் 

தற்போது ஆன்லைன் செயலிகள் மூலம் பல்வேறு மீட்டிங்குகள் நடைபெறுகின்றன. அமர்ந்த இடத்தில் இருந்தே பல கலை களைக் கற்றுக்கொள்வதும், துறை சம்பந்தமான வல்லுநர்கள் பேசுவதைக் கேட்பதும் சுலபமாக மாறியிருக்கிறது. பிடித்தமான விஷயத்தை கற்றுக்கொள்ள முயற்சிக் கலாம். அதனால், கவனம் வேறு பக்கம் திசை திரும்புவதுடன், மனதில் ஏற்பட்ட வெறுமை உணர்வை அகற்றி, ஊக்கமாக செயல்படுவதற்கான வழிகள் உருவாகும்.

THANKS TO DAILY THANTHI DEVATHAI...



Post a Comment

Previous Post Next Post

Search here!