நாளை அரிய வளைய
சூரிய கிரகணம் நிகழும்
சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் ஒரே
நேர்கோட்டில் வரும் போது, சூரியனுக்கும்
பூமிக்கும் இடையில் நிலவு இருக்கும்.
அப்போது சூரிய ஒளியை, நிலவு மறைப்ப
தால் அதன் நிழல் பூமியில் தெரியும். இது சூரிய
கிரகணம் என அழைக்கப்படுகிறது.
அதன்படி,
நடப்பு ஆண்டின் முதல் சூரிய கிரகணம், நாளை
(10ம் தேதி) நிகழ்கிறது.
உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்
கிணைப்பாளர் கண்ணபிரான் கூறியதாவது:
சூரியனின் ஒரு பகுதியை மட்டும் நிலவு
மறைப்பது பகுதி சூரிய கிரகணம் என்று அழைக்
கப்படுகிறது. நிலவு, சூரியனை மத்தியில் மறைப்
பதால் சூரியன் வளையம் போன்று தோன்றும்.
இது வளைய சூரிய கிரகணம் என அழைக்கப்
படுகிறது.
கிரகணம், இந்தியாவில்
அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளைத்
தவிர வேறு எங்கும் காண இயலாது. கனடா
வின் சில பகுதிகள், கிரீன்லாந்து, ரஷ்யா போன்ற
இடங்களில் இந்த வளைய சூரிய கிரகணம்
தெரியும்.
அதேநேரம், வடக்கு அலாஸ்கா, அமெரிக்கா,
கனடா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகு
திகளில், பகுதி சூரிய கிரகணம் தெரியும்.
இந்த வளைய சூரிய கிரகணம், இந்திய நேரப்
படி, நாளை, மதியம், 1:42 மணிக்கு தொடங்கி,
மாலை, 5:41 மணி வரை நிகழ்கிறது. வெறும்
கண்களால் பார்க்கக்கூடாது. சூரிய கண்ணாடி
வாயிலாக மட்டுமே பார்க்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment