கால்நடை பராமரிப்பு துறையில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்கும்படி, துறை அலுவலர்களுக்கு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் இயக்குனர் அலுவலகத்தில், துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.
அதில் அமைச்சர் பேசியதாவது:கிராமப்புற பொருளாதார முன்னேற்றத்திற்கு, கால்நடைகளின் பங்கு மிக முக்கிய இடம் வகிக்கிறது.கால்நடை பராமரிப்பு தொழில், தென் மாவட்டங்களில் செவ்வனே நடக்க, நிலப்பரப்பிற்கு ஏற்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.அப்போது, கிராமங்களில் இருந்து மக்கள், நகரங்களுக்கு புலம் பெயர்வது குறைந்து, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.தென் மாவட்டங்களில், ஆடு வளர்ப்பு தொழிலில் அதிக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆடுகளின் நலத்தை பேணும் வகையில், காலமுறைப்படி குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கால்நடை துறைக்கு ஒப்பளிக்கப்பட்ட, பல்வேறு நிலையில் உள்ள, 14 ஆயிரத்து, 29 பதவிகளில், 5,834 பதவிகள்காலியாக உள்ளன.அவற்றை நிரப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பால், முட்டை, இறைச்சி ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரித்து, விவசாயிகளின் வருமானம் உயர வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், கால்நடை பராமரிப்பு துறை செயலர் ஜவகர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் இயக்குனர் ஞானசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment