வெளிநாட்டில் கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு - EDUNTZ

Latest

Search here!

Tuesday, 8 June 2021

வெளிநாட்டில் கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு



கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கும், குறுகிய பயணமாக இந்தியாவுக்கு வந்து திரும்பும் பயணிகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவ தில் முன்னுரிமை வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள், மருந்து மற்றும் ஆக் சிஜன் ஒதுக்கீடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசா ரித்து வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசார ணைக்கு வந்தது. அப்போது தமி ழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் தரப்பில், கரோனா நோய்த் தொற் றுப் பரவலின் இரண்டாவது அலை கட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி கள், கரோனாவின் இரண்டாவது அலை பரவத் தொடங்கிய நாள் களில் போதுமான முன்னேற்பாடுகள் இல்லை. 

பின்னர் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைக ளும், ஒருங்கிணைந்த செயல்பாடு களும் கரோனா தற்போது கட்டுக் குள் வருவதற்கு முக்கிய காரணம். கரோனா மற்றும் கருப்புப் பூஞ்சை நோய்களுக்கான மருந் துகள் மற்றும் தடுப்பூசிகள் ஒதுக்கும் பணிகள் தற்போது சரியான பாதையில் சென்று கொண்டுள் ளது. நாட்டில் உள்ள அனைவருக் கும்கிடைக்கும் வரை இந்தப் பணி கள் தொடர வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் இந்திய பய ணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலை யில் கல்விக்காக வெளிநாடுகளுக் குச் செல்லும் மாணவர்களுக்கும், குறுகிய கால பயணமாக இந்தியா வுக்கு வந்து திரும்பும் பயணிகளுக் கும் கரோனா தடுப்பூசி செலுத்து வதில் முன்னுரிமை வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என நீதிப திகள் அறிவுறுத்தினர். பின்னர், தடுப்பூசியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசு கள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 21- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment