மரம் நட்டால் பட்டா
திதாக மரக்கன்றுகளை நட்டு, ஆதாரத்தை சமர்ப்பித்தால், சம்பந்தப்பட்டோரின் பட்டா மாறுதல் விண்ணப்பம், ஒரே நாளில் பரிசீலிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர், அதற்கான பட்டாவில் பெயர் மாறுதல் செய்ய, தாலுகா அலுவலகங்களை அணுகுகின்றனர்.ஆனால், பெரும்பாலான தாலுகா அலுவலகங்களில், பொது மக்கள் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுகிறது. இந்நிலையில், கரூர் மண்டல துணை வட்டாட்சியர் மோகன்ராஜ், ஒரு புதிய திட்டத்தை அறிவித்து உள்ளார்.
இதன்படி, பட்டா மாறுதல் கோருவோர், தங்கள் நிலத்தில் ஐந்து புதிய மரக்கன்றுகளை நட்டு, அதற்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும்.இவ்வாறு செய்தால், அவர்களது பட்டா மாறுதல் விண்ணப்பம் மீதான பரிசீலனை, ஒரே நாளில் முடித்து தரப்படும் என, அறிவித்துள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இது குறித்த தகவல், சமூக வலைதளங்களில் பரவி, பொது மக்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment