'உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் பள்ளிக் கல்விக்கு ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம் - EDUNTZ

Latest

Search here!

Wednesday 2 June 2021

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் பள்ளிக் கல்விக்கு ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்

'உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் பள்ளிக் கல்விக்கு ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம் 


'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் பெறப்படும் மனுக்களுக்குத் தீர்வு காண்பதற்கு ஒருங்கிணைப்பு அலுவ வராக எம். ராமசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 


'உங்கள் தொகுதியில் முதல் மைச்சர்' என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் பெறப்படும் மனுக்கள் மீது தீர்வு காண்பதற்கு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைக் கப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறை தொடர்பான மனுக்க ளுக்கு உரிய பதில் அளிக்கப்படுவதைக் கண்காணிக்கவும், அதில் குறைகள் ஏதும் இருந்தால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிவுறுத்திட பள்ளிக் கல்வி இயக்கு நர் அலுவலகத்தில் நிர்வாக அலுவலராக எம். ராமசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும் மாவட்டந்தோறும் ஒரு பொறுப்பு அலுவ வரை நியமித்து, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை யின் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை யின் விவரத்தினை ஒவ்வொரு மாதமும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிக்கையாக அனுப்ப வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளார்.

1 comment:

  1. My wife have passed paper_2 TET Examination in the year of _2013 but stillnow appointment of work not issued.

    ReplyDelete