நோய் தீர்க்கும் தாம்பூலம் 

ஆரோக்கியமாக இருக்கவேண்டுமென்றால் உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சரியான அளவில் இருக்க வேண்டும். அவற்றில் சமநிலைக்குறைவு ஏற்படும் போது, பல்வேறு வியாதிகள் ஏற்படுகின்றன. இந்த பிரச் சினைக்கு எளிதாக தீர்வு காணும் வகையில், முன்னோர்கள் கடைப்பிடித்த விஷயமே "தாம்பூலம் தரிக்கும்' பழக்கமாகும். 40 வயதை கடந்தவர் களுக்கு ஏற்படும் செரிமானக் கோளாறுகள் மற் கால்சியம் பற்றாக்குறை பிரச்சினை களுக்கு எளிய தீர்வாகவும் இந்த பழக்கம் அமைந்துள்ளது. தாம்பூலத்தில் உள்ள முக்கிய பொருளான வெற்றிலை சிறந்த மூலிகையாகும். அது, சளித் தொல்லையை நீக்கும் குணம் கொண்டது. அதனால், குழந்தைகள் சளித்தொல்லையால் சிரமப்படும்போது, வெற்றிலையை வதக்கி, சாறு பிழிந்து அருந்துவதற்கு தருவார்கள். மேலும், சுண்ணாம்பு சேமிக்கப்பட்டுள்ள பாத்திரத்தின் மேற்புறம் பரவியிருக்கும் தெளிந்த நீரையும் குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இவற்றால், கால்சியம் பற்றாக்குறை மற்றும் சளித்தொல் லைக்கு ஒரே சமயத்தில் தீர்வு காணப்பட்டது. முற்காலங்களில் சாப்பிட்ட பின்பு 3 வேளையும் தாம்பூலம் தரிக்கும் வழக்கம் இருந்து வந்தது. 

தாம்பூலம் அளிக்கும் நன்மைகள் 

உணவுக்கு பின்னர் தாம்பூலம் தரிப்பது ஜீரண சக்தியை அதிகரிக்கும். மேலும், வெற் றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் சரியான அளவில் சேர்த்து மெல்லும் போது, உருவாகும் சுவை, உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும். தாம்பூலத்தில் உள்ள பாக்கின் துவர்ப்பு சுவை  பித்தத்தையும், சுண்ணாம்பில் உள்ள காரச் சுவை வாதத்தையும், வெற்றிலையின் சுவை கபத்தையும் அகற்றும் தன்மை கொண்டது. தாம்பூலத்தில் கூடுதலாக சேர்க்கப்படும் ஏலக் காய், கிராம்பு, ஜாதிபத்திரி ஆகியவற்றால் வாய் மற்றும் உள்ளுறுப்புகளை பாதிக்கும் கிருமிகள் கொல்லப்படுகின்றன. 

தரிக்கும் முறை 

தாம்பூலத்தை வாயில் போட்டு நன்றாக மெல்ல வேண்டும். அப்போது முதலில் சுரக்கும் உமிழ்நீரை துப்பிவிட வேண்டும். அதன் பிறகு, நிதானமாக மெல்லுவதால் உருவாகும் உமிழ் நீரை விழுங்க வேண்டும். காலை உணவுக்குப் பின் தரிக்கும் தாம்பூலத்தில் பாக்கு வழக்கத்தை விட சற்று கூடுதலாக சேர்க்கப்படுவதால், மதிய வேளையில் வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் பித்தம் கட்டுப்படும். மதிய உணவுக்கு பின் சுண்ணாம்பை அதிகம் சேர்க்கும் போது, உணவினால் உடலில் உருவாகும் வாயுத் தொல்லை கட்டுப்படும். இரவில் வழக்கத்தை விட ஓரிரு வெற்றிலைகளை கூடுதலாக சேர்த்துக் கொண்டால் சளித்தொல்லை கட்டுப்படும்.


Post a Comment

أحدث أقدم

Search here!