தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் மேலும்
ஒருவாரம் நீட்டிப்பு - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.
கொரோனா
வைரஸ் நோய்த் தொற்று
பரவலைத்
தடுப்பதற்காக,
இந்திய
அரசின்
வழிகாட்டுதலின்படி,
தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச்
சட்டத்தின்
கீழ்,
ஊரடங்கு
உத்தரவு
குறிப்பிட்ட
சில
தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 27-5-2021
அன்று வெளியிடப்பட்டுள்ள ஆணையில், கொரோனா நோய்த்
தடுப்பு நடவடிக்கைகள் 30-6-2021 வரை தொடர்ந்து அமலில்
இருக்கும்
என
ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும், நோய்த்
தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு, அனைத்துக் கட்சி
சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு
உயர் அலுவலர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் போது
தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், கொரோனா பெருந்தொற்று நோய்ப்
பரவலைக்
கட்டுப்படுத்த,
கடந்த
24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில்
நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஊரடங்கு வரும்
07-6-2021 அன்று
காலை
6 மணிக்கு முடிவுக்கு வரும்
நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக
ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின்
விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த
முழு ஊரடங்கு 7-6-2021 முதல் 14-6-2021 காலை 6-00 மணி
வரை, சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு
செய்து உத்தரவிட்டுள்ளேன்.
No comments:
Post a Comment