காலை உணவின் மகத்துவம் - EDUNTZ

Latest

Search here!

Friday 4 June 2021

காலை உணவின் மகத்துவம்

காலை உணவின் மகத்துவம் 


காலை உணவு மிக முக்கியம் என்கிறது, மருத்துவம்.காலை உணவினால் வைட்டமின், மினரல்ஸ், கார்போ ஹைட்ரேட் சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். டிபன், சாப்பாடு, பழங்களை சாப்பிடலாம். எழுந்ததில் இருந்து 2 மணி நேரத்துக்குள்ளாக சாப்பிட வேண்டும். காய்கறிகளை பொரியலாகவோ, குழம்புடனோ சாப்பிடலாம். 

குறிப்பாக, காய்கறிகளை நறுக்கி இட்லி, தோசை மாவுகளில் கலந்து, வேகவைத்து சாப்பிடலாம். நீரிழிவு நோயாளிகள் நெல்லி ஜூஸ் எடுத்துக்கொள்ளுங்கள். இயற்கையாக கிடைக்கும் பழச்சாறு, உளுந்து, முளைகட்டி வேகவைத்த தானியங்களை எடுத்துக் கொள்ளலாம். அரக்கப்பறக்க அரைகுறையாக சில நிமிடங்களில் சாப்பிடுபவர்கள்தான் அதிகம். 

அப்படி செய்வதால் செரிமானக்கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. சராசரியாக ஒவ்வொரு வேளையும் குறைந்தபட்சம் 10 முதல் 20 நிமிடங்கள் வரை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். தினம் ஒரு பழம், காய்கறி, கீரை ஆகியவை உணவில் இருந்தால் உங்கள் ஆரோக்கியம் ேமம்படும்.

No comments:

Post a Comment