தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6
ந. க. எண். 006587 /கே1/2021, நாள். 1 .062021
பொருள்
JOIN OUR WHATSAPP - CLICK HERE
தொடக்கக் கல்வி - 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான முதல்
பருவத்திற்கான விலையில்லா பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம்
மற்றும் இதர விலையில்லாப் பொருட்கள்
மாவட்டம் /
ஒன்றிய மையத்திலிருந்து பள்ளிகளுக்கு நேரடியாக கொண்டு செல்ல
போக்குவரத்து செலவினத் தொகை ECS மூலமாக அனுப்புதல்
தொடர்பாக.
பார்வை
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், காசோலை
எண்.557526, நாள்.08.06.2021
2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான முதல் பருவத்திற்கான பாடப்புத்தகம், நோட்டுப்
புத்தகம் மற்றும் இதர விலையில்லாப் பொருட்கள் மாவட்டம் / ஒன்றிய மையங்களிலிருந்து
பள்ளிகளுக்கு நேரடியாக கொண்டு செல்ல போக்குவரத்து செலவினத் தொகை, பார்வையில்
காண் கடிதத்தின்படி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திலிருந்து
பெறப்பட்டுள்ளது.
மேற்கண்ட 2021-2022 ஆம் கல்வியாண்டின் முதல் பருவத்திற்கான போக்குவரத்து
செலவினத்திற்கான தொகை இணைப்பில் கண்டுள்ளவாறு அனைத்து மாவட்ட
முதன்மைக்கல்வி அலுவலர்களின் அலுவலக சேமிப்பு கணக்கு எண்ணில் ECS
தொகை பகிர்ந்தளிக்கப்படுகிறது.
மூலமாக
எனவே, 2021 - 2022 ஆம் கல்வியாண்டில் முதல் பருவத்திற்கான விலையில்லா
பொருட்களை அனைத்து மாவட்ட மையங்களிலிருந்து வட்டாரக் கல்வி
அலுவலக
மையத்திற்கும், வட்டாரக்கல்வி அலுவலக மையங்களிலிருந்து பள்ளிகளுக்கும் நேரடியாக
கொண்டு சேர்க்க மேற்கொள்ளப்படும் செலவினத்திற்கான முன்பணத் தொகை என்பதால்,
முதன்மைக்கல்வி அலுவலர்களின் அலுவலக சேமிப்பு கணக்கு எண்ணிற்கு ECS மூலம்
தொகை வரவு வைக்கப்பட்டவுடன் சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலர்களின் அலுவலக சேமிப்பு
கணக்கு எண்ணிற்கு ECS மூலம் உடனடியாக தொகை விடுவித்தும், அதற்கானபயன்பாட்டுச் சான்றினை உரிய படிவத்தில் அசலாக 4 நகல்களுடன் முதன்மைக் கல்விஅலுவலரின் சான்றொப்பத்துடன் 15.07.2021-ம் தேதிக்குள், எவ்வித நினைவூட்டிற்கும் இடமளிக்கா வண்ணம் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 2021 - 2022ஆம் கல்வி ஆண்டிற்கானவிலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் இதர விலையில்லா பொருட்களை வட்டாரக்கல்வி அலுவலக மையங்களிலிருந்து பள்ளிகளுக்கு அனுப்பவும் அறிவுறுத்தப்படுகிறது. பள்ளிகளில்
இருந்து மாணவர்களுக்கு எப்போது வழங்கவேண்டும் என்பது குறித்து பின்னர் தகவல்
தெரிவிக்கப்படும்.
மேலும், 2020-2021 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் பருவத்திற்கான போக்குவரத்து
செலவினத் தொகை முதன்மைக்கல்வி அலுவலர்களின்
அலுவலக சேமிப்பு
கணக்கு
எண்ணிற்கு ECS மூலம் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நினைவூட்டுகள்
மற்றும் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்பட்டும், 2020-21 மூன்றாம் பருவத்திற்கான
பயன்பாட்டுச் சான்று பெரும்பாலான மாவட்டங்களிலிருந்து இதுவரை பெறப்படவில்லை,
இதனால் அரசுக்கு கருத்துருக்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்படுகின்றது. எனவே, இனிவரும்
காலங்களில் எவ்வித நினைவூட்டிற்கும் இடமளிக்காவண்ணம் குறிப்பட்ட காலங்களில்
பயன்பாட்டுச் சான்றினை உடனடியாக அனுப்பி வைக்க சார்ந்த முதன்மைக் கல்வி
அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு -
போக்குவரத்து செலவின விவரம்
தொடக்கக் கல்வி இயக்குநர்
பெறுநர்
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள். (மின்னஞ்சல் வழியாக)
நகல்
1. அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை, தலைமைச் செயலகம்,
சென்னை-9 அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.
2. மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்,
சென்னை-6|
அவர்களுக்கு தகவலுக்காக பணிவுடன் அனுப்பலாகிறது.
3. பள்ளிக்கல்வி ஆணையர், சென்னை-6, அவர்களுக்கு தகவலுக்காக பணிவுடன்
அனுப்பலாகிறது.
No comments:
Post a Comment