10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டு 2 பருவங்களாக பிரிப்பு சி.பி.எஸ்.இ. அறிவிப்பு - EDUNTZ

Latest

Search here!

Tuesday 6 July 2021

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டு 2 பருவங்களாக பிரிப்பு சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு 2021-22-ம் கல்வி ஆண்டு 2 பருவங்களாக பிரிக்கப்படுவதாக சி.பி.எஸ்.இ. அறிவித்து உள்ளது. 


கொரோனாவால் அச்சுறுத்தல் கொரோனா தொற்று காரணமாக மாணவ-மாணவிகளின் கல்வி கடந்த 2 கல்வி ஆண்டுகளிலும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2019-20-ம் ஆண்டு பொதுத்தேர்வு கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேநேரம் 2020-21-ம் ஆண்டு 2 வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. 

தற்போதும் இந்த தொற்று முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில், நடப்பு 2021-22-ம் கல்வி ஆண்டிலும் மாணவர்களின் கல்விக்கு அச்சுறுத்தல் நீடிக்கிறது. அவர்களால் இன்னும் பள்ளிகளுக்கு திரும்ப முடியவில்லை. பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே அவர்களது கல்விப்பயணம் நகர்ந்து வருகிறது. பாடத்திட்டங்களும் பிரிப்பு எனவே இந்த ஆண்டும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுகள் பாதிக்கப்படாமல் இருப்பதில் சி.பி.எஸ்.இ. தனிக்கவனம் செலுத்தி வருகிறது. 

இது தொடர்பாக நீண்ட ஆலோசனைகளை நடத்தி, அதன் அடிப்படையில் நேற்று சில முக்கிய உத்தரவுகளை சி.பி.எஸ்.இ இயக்குனர் ஜோசப் இம்மானுவேல் (கல்வி) வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:- 2021-22-ம் கல்வி ஆண்டு 2 பருவங்களாக பிரிக்கப்படுகிறது. இதைப்போல துறை வல்லுனர்களின் கருத்துகள் மற்றும் தலைப்புகளின் தொடர்புகள் அடிப்படையில் முறையான அணுகுமுறையை பின்பற்றி பாடத்திட்டங்கள் 2 பருவங்களாக பிரிக்கப்படுகின்றன. 2 முறை தேர்வுகள் பிரிக்கப்பட்ட பாடத்திட்டங்களின் அடிப்படையில் ஒவ்வொரு பருவத்துக்கு இறுதியிலும் தேர்வு நடத்தப்படும். இதில் முதல் பருவத்தேர்வு வருகிற நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும். 2-ம் பருவத்தேர்வு அடுத்த ஆண்டு (2022) மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும். கடந்த கல்வி ஆண்டைப்போல நடப்பு 2021-22-ம் கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டங்களும் குறைக்கப்படும். மதிப்பீட்டு திட்டம் மதிப்பெண்கள் நியாயமான முறையில் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், வாரியத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கையின்படி அகமதிப்பீடு, செய்முறை, திட்ட பணிகள் (புராஜெக்ட்) அனைத்தும் மிகவும் நம்பகமானதாகவும், செல்லுபடியானதாகவும் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு சி.பி.எஸ்.இ இயக்குனர் ஜோசப் இம்மானுவேல் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment