தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு அலகுத்தேர்வுகள் – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு! - EDUNTZ

Latest

Search here!

Wednesday, 21 July 2021

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு அலகுத்தேர்வுகள் – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 

இதனை சரி செய்ய அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. முதற்கட்டமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது. இதனால் அந்த மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டது. 

இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது இந்த தேர்வுகள் கல்வி தொலைக்காட்சி மூலமாகவோ, ஆன்லைன் (வாட்ஸ்அப்) மூலமாகவோ நடத்தப்படும் எனவும், நடத்தி முடிக்கப்பட்ட பாடங்களில் இருந்து மாதந்தோறும் அலகுத்தேர்வு வினாக்கள் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மாத இறுதியில் மொத்தமாக இந்த தேர்வு 50 மதிப்பெண்ணுக்கு நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ்ஆப் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதன் மூலமாகவே வினாக்களை அனுப்பி மாணவர்கள் தேர்வு எழுதி அதனை வாட்ஸ்ஆப் மூலமாகவே அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment