அரசு மருத்துவமனையில் - தற்காலிக அடிப்படையில் மருத்துவ பணி | ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை தொகுப்பூதியம் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 30 July 2021

அரசு மருத்துவமனையில் - தற்காலிக அடிப்படையில் மருத்துவ பணி | ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை தொகுப்பூதியம்

சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயா ராணி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

கரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக சென்னை சமூக மகப்பேரியல் நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவனையில் நர்சு, பார்மசிஸ்ட், லேப் டெக்னீஷியன், அனஸ்தீசியா டெக்னீஷியன், இசிஜி டெக்னீஷியன், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், ரேடியோகிராபர் ஆகியோர் தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் (6 மாதங்கள் மட்டும்) நியமிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை தொகுப்பூதியம் வழங்கப்படும். 

இந்த பணியிடங்கள் அனைத்தும் தற்காலிகமானவை. எக்காரணம் கொண்டும் பணிநிரந்தரம் செய்யப்பட மாட்டாது. சுய விண்ணப்பம் மற்றும் கல்விச்சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படத்தை, ‘சமூக மகப்பேரியல் இயக்குநர், சமூக மகப்பேரியல் நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனை, சேப்பாக்கம், சென்னை-5’ என்ற முகவரிக்கு ஆகஸ்டு 3-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment