12ம் வகுப்பு துணைத்தேர்வு ‘ஹால்டிக்கெட்' இன்று வெளியீடு அரசு தேர்வுத்துறை அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Saturday, 31 July 2021

12ம் வகுப்பு துணைத்தேர்வு ‘ஹால்டிக்கெட்' இன்று வெளியீடு அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ்-2 வகுப்பு மாணவர்கள் கொரோனா காரணமாக தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வழங்கப்பட்ட நிலையில், அதில் திருப்தி இல்லாதவர்களுக்கும், தனித்தேர்வர்களாக விண்ணப்பித்தவர்களுக்கும் துணைத்தேர்வு நடத்தப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. 

 அதன்படி, அந்த துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- 

அரசு வழங்கிய மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்கள், தனித்தேர்வர்களாக விண்ணப்பித்து தேர்வு எழுத முடியாதவர்களுக்கு துணைத்தேர்வு வருகிற 6-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட் (நுழைவுச்சீட்டு) 31-ந்தேதி (இன்று) காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப எண் இல்லாத காரணத்தினால் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்ய இயலாத தேர்வர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு தங்களுடைய நுழைவுச்சீட்டினை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment