தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் சேர்க்கை - 2021 | கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு தேர்ச்சி - EDUNTZ

Latest

Search here!

Friday 2 July 2021

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் சேர்க்கை - 2021 | கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு தேர்ச்சி

தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்ககம், சென்னை - 32 

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் சேர்க்கை - 


2021-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விண்ணப்பிக்கும் முறை: 

www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வித்தகுதி : 

எட்டாம் வகுப்பு / பத்தாம் வகுப்பு தேர்ச்சி 

விண்ணப்பக்கட்டணம்: 

விண்ணப்பக்கட்டணத் தொகையான ரூ.50/- விண்ணப்பதாரர் Debit Card / Credit |Card | Net Banking/ G-pay வாயிலாக செலுத்தலாம். 

இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் 28.07.2021 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும். 


மேலும் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்காக விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரியிலும் அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மின்னஞ்சல் முகவரி : onlineitiadmission@gmail.com அலைபேசி எண் 94990 55612 இயக்குநர், மற்றும் Whatsapp எண் 94990 55618 

No comments:

Post a Comment