டோக்கியோவினை நோக்கி சாலை எனும் தலைப்பில் ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி-வினா போட்டி வருகிற22-ந்தேதிவரை நடக்கிறது - EDUNTZ

Latest

Search here!

Friday 2 July 2021

டோக்கியோவினை நோக்கி சாலை எனும் தலைப்பில் ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி-வினா போட்டி வருகிற22-ந்தேதிவரை நடக்கிறது

டோக்கியோவினை நோக்கி சாலை எனும் தலைப்பில் ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி-வினா போட்டி நடக்கிறது. 

விளையாட்டுப் போட்டிகள் ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ நகரில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. மேசைப்பந்து விளையாட்டில் ஜி.சத்யன் மற்றும் அ.சரத் கமல் ஆகியோரும், வாள்சண்டையில் சி.ஏ.பவானிதேவியும், பாய்மரப் படகோட்டுதலில் கே.சி.கணபதி, வருண் அ.தக்கர் மற்றும் நேத்ரா குமணன் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார்கள். 

விழிப்புணர்வு 

இதுகுறித்து கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தெரிவிக்கையில், நமது தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தின் முன்பு வருகிற 22-ந்தேதி வரை ஒலிம்பிக் செல்பி பாய்ண்ட் ஏற்படுத்தி வீரர், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்களுக்கு ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி-வினா போட்டியில் பங்கேற்கும் முறை, ரோடு டூ டோக்கியோ 2020 எனும் தலைப்பில் அனைத்து வயதினருக்குமான ஆன்லைன் ஒலிம்பிக் வினாடி வினா போட்டி வருகிற 22-ந்தேதி வரை https://fitindia.gov.in என்னும் இணையதளத்தில் ரோடு டூ டோக்கியோ 2020 வினாடி-வினா என்னும் இணைப்பில் கலந்துகொள்ளலாம். 

 ஆன்லைன் மூலம் இந்த இணைப்பில் 120 வினாடிகளுக்குள் பதிலளிக்கும் வகையில் ஒலிம்பிக் போட்டிகள் குறித்த 10 கேள்விகள் கேட்கப்படும். ஒரு நபர் ஆன்லைன் மூலம் ஒலிம்பிக் வினாடி-வினா போட்டியில் ஒரே ஒரு முறை மட்டுமே பங்கேற்க இயலும். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்திய அணியின் டீ-சர்ட் மற்றும் பங்கேற்பு சான்றிதழ் பரிசாக வழங்கப்படும், இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment