27 பல்கலை உறுப்பு கல்லுாரிகளில் ஆன்லைன் வழியில் 'அட்மிஷன்' - EDUNTZ

Latest

Search here!

Friday 9 July 2021

27 பல்கலை உறுப்பு கல்லுாரிகளில் ஆன்லைன் வழியில் 'அட்மிஷன்'

அரசு கல்லுாரிகளாக மாற்றப்பட்ட, 27 பல்கலை உறுப்பு கல்லுாரிகளில், ஆன்லைன் வழியில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு பல்கலைகளில் நிதி நெருக்கடி ஏற்பட்டதால், உறுப்பு கல்லுாரிகளை நடத்துவதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால், கலை, அறிவியல் படிப்புகளை நடத்தும், பல்கலை உறுப்பு கல்லுாரிகள் அனைத்தும், அ.தி.மு.க., ஆட்சியில், அரசு கல்லுாரிகளாக மாற்றப்பட்டன.சென்னை பல்கலை, 2; பாரதியார் பல்கலை, 3; பெரியார் பல்கலை, 4; மதுரை காமராஜ், 4; அழகப்பா, 1; பாரதிதாசன், 6; மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, 3; திருவள்ளுவர் பல்கலையின், 4 கல்லுாரிகள் என, 27 கல்லுாரிகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.

இந்த கல்லுாரிகளுக்கு ஏற்கனவே, பல்கலைகள் சார்பில், மாணவர் சேர்க்கை நடந்த நிலையில், இந்த ஆண்டு முதல் உயர்கல்வி துறையின், கல்லுாரி கல்வி இயக்ககம் வழியே மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.அரசு கல்லுாரிகளாக மாற்றப்பட்ட, 27 உறுப்பு கல்லுாரிகளிலும், அரசின் மற்ற கலை, அறிவியல் கல்லுாரிகளை போல், ஆன்லைன் வழியில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என, கல்லுாரி கல்வி இயக்குனர் பூர்ண சந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment