டி.என்.பி.எஸ்.சி.க்கு புதிதாக 4 உறுப்பினர்கள் நியமனம் - EDUNTZ

Latest

Search here!

Wednesday 14 July 2021

டி.என்.பி.எஸ்.சி.க்கு புதிதாக 4 உறுப்பினர்கள் நியமனம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளராக உமா மகேஸ்வரி், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக கிரண் குராலா ஆகியோர் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். அவர்களும் அந்த பதவிகளில் பொறுபபு ஏற்று தங்கள் பணிகளை தொடங்கி விட்டனர். இந்தநிலையில் டி.என்.பி.எஸ்.சி.க்கு புதிதாக 4 உறுப்பினர்களை நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக கவர்னர், இந்திய அரசியல் அமைப்பு பிரிவு 316 (1)-ன் கீழ் டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரி முனியநாதன், பேராசிரியர் கே.ஜோதி சிவஞானம், கே.அருள்மதி, பாதிரியார் ஏ.ராஜ் மரியசூசை ஆகிய 4 பேர் நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்கள் பொறுப்பு ஏற்றது முதல் 6 ஆண்டுகள் அல்லது 62 வயது பூர்த்தி அடைதல் இதில் எது முந்தையதோ, அதுவரை அவர்கள் இந்த பதவியில் இருப்பார்கள். இவர்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரி முனியநாதன், தொழிலாளர் துறை ஆணையராக உள்ளார். பேராசிரியர் கே.ஜோதி சிவஞானம் சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறை தலைவராக இருக்கிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment