சமூக இடைவெளியைக் கண்காணிக்க புதிய கருவி 6-ம் வகுப்பு மாணவனின் கண்டுபிடிப்பு - EDUNTZ

Latest

Search here!

Saturday 17 July 2021

சமூக இடைவெளியைக் கண்காணிக்க புதிய கருவி 6-ம் வகுப்பு மாணவனின் கண்டுபிடிப்பு



கொரோனா காலத்தில் பொது மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க உதவும் கருவியை 6-ம் வகுப்பு படிக்கும் டெல்லி மாணவன் ஹித்தேன் கவுதம் கண்டுபிடித்துள்ளார். கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கியபோது, 6 அடி சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதிமுறை காற்றில் பறக்கவிடப்பட்டது. கொரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளி அவசியம் என்பதால், பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதற்காகப் புதிய கருவி ஒன்றை ஹித்தேன் கவுதம் கண்டுபிடித்துள்ளார். கூட்டம் சேருவதைத் தடுக்கவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் இந்தக் கருவி உதவுகிறது. “இந்தக் கருவி உள்ளே நுழைவோர் மற்றும் வெளியேறுவோரைக் கண்காணிக்கும். கடந்து செல்லும் மக்களின் உடல் வெப்பத்தைக் கண்டறிய அகச்சிவப்பு சென்சார்களை பயன்படுத்தி உள்ளேன். இதை எல்.சி.டி. டிஸ்பிளேயில் இணைக்க முடியும். எவ்வளவு பேர் உள்ளே வந்து போகிறார்கள் என்பதை இதன் மூலம் கண்காணிக்க முடியும். அதிகபட்சமாக ஆட்கள் உள்ளே வந்துவிட்டால், சிவப்பு விளக்கு எரியும். தேவையான அளவுக்கு ஆட்கள் உள்ளேயிருந்து வெளியேறிவிட்டால், சிவப்பு விளக்கு தானாக அணைந்துவிடும். பொது இடங்களில் ஏராளமானோர் திரளுவதை இந்தக் கருவி தடுக்கும். என் பள்ளி ஆய்வகத்தில் கிடைத்த சில பொருட்களை இந்தக் கருவியை உருவாக்கப் பயன்படுத்தினேன். மீதமுள்ள பொருட்களை ஆன்லைனில் வாங்கினேன். என் ஆசிரியர்களும் எனக்கு உதவியாக இருந்தார்கள். இந்தக் கருவியின் கோட்டிங்குகளை உருவாக்க என் தந்தை உதவியாக இருந்தார். இதன் காப்புரிமைக்காக விண்ணப்பித்துள்ளேன். பூங்காக்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இதைப் பயன்படுத்தலாம்’’ என்றார்.

No comments:

Post a Comment