தித்திக்குதே... ஜூலை 7-ந் தேதி சாக்லெட் தினம் - EDUNTZ

Latest

Search here!

Monday 5 July 2021

தித்திக்குதே... ஜூலை 7-ந் தேதி சாக்லெட் தினம்

சிறுவர் முதல் பெரியவர் வரை சாக்லெட்டை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. பல வடிவங்களில், பலவித சுவைகளில் கிடைக்கும் சாக்லெட், ஆரம்ப காலத்தில் ‘தியோப்ரோமா கோக்கோ’ என்ற தாவர விதைகளுடன், ஆல்கஹாலையும் இணைத்து தயாரிக்கப்பட்ட ஒரு பானமாகத்தான் இருந்தது. பிற்காலத்தில்தான் அது திரவ நிலையில் இருந்து திடப் பொருளாக உருமாற்றம் பெற்றது. 


அமெரிக்காவின் மீசோ என்ற பகுதியில்தான் முதன் முதலில் இந்த சாக்லெட் பானம் தயார் செய்யப்பட்டது. அந்தப் பகுதி மக்கள், க்வெட்சால்கோட்ல் என்ற தங்களின் கடவுளுக்கு அன்பளிப்பாக வழங்க இந்த சாக்லெட் பானத்தை பயன்படுத்தியிருக் கிறார்கள். உற்சாக பானமாக இருந்துவந்த சாக்லெட், சர்க்கரையின் வரவுக்கு பிறகுதான் இனிப்பு தரும் பானமாக மாறியது. 

அமெரிக்காவின் மீசோ பகுதியில் மட்டுமே அறியப்பட்ட இந்த சாக்லெட் பானம், 15-ம் நூற்றாண்டில்தான் ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகமானது. அதுவரை சாக்லெட் பற்றிய எந்த அறிமுகமும் ஐரோப்பிய மக்களுக்கு இருக்கவில்லை. ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகமான பிறகுதான், சாக்லெட் பிரபலமடையத் தொடங்கியது. திரவத்தில் இருந்து திட நிலைக்கு சாக்லெட் உருப்பெற்றதும் அப்போதுதான். கோக்கோ விதைகளை பறித்து, அவற்றை பதப்படுத்தி அதிலிருந்து குறிப்பிட்ட வெப்ப நிலையில் சாக்லெட் திடப் பொருளாக தயாரிக்கப்பட்டது. அவற்றின் தன்மையை பொறுத்து, அது எந்த வெப்பநிலையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் முடிவு செய்யப்பட்டது. உடல் பருமனாக இருப்பவர்கள் சாக்லெட் அதிகம் சாப்பிடக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறார்கள். 

அதே நேரம் ரத்த சுத்திகரிப்பு அமைப்பை கட்டுப்படுத்துவதற்கும், கார்டியோவாஸ்குலர் பிரச்சினைக்கு மருந்தாகவும், சாக்லெட் இருப்பதாக ஆராய்ச்சிகள் சில சொல்கின்றன.இத்தகைய சிறப்பு கொண்ட சாக்லெட், இன்று பல வடிவங்களில், பல சுவைகளில் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன. இன்றளவும் கூட சாக்லெட் உற்பத்தியில் அமெரிக்காதான் முன்னிலையில் இருக்கிறது. 

இந்த சாக்லெட் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டது. ஆம்.. கி.மு. 1750-ல் சாக்லெட் பானம் உருவானதாக சொல்லப்படுகிறது. இன்று பரிசளிக்கும் பொருளாகவும், பிறந்தநாள் உள்ளிட்ட கொண்டாட்டங்களில் பகிர்ந்துகொள்ளப்படும் பொருளாகவும் மாறி இருக்கும் சாக்லெட்டுக்கு, சிறப்பு தினம் ஒன்றும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 7-ந் தேதி சாக்லெட் தினமாக கொண்டாடப்படுகிறது.

No comments:

Post a Comment