மத்திய அரசு பணிகளில் 8¾ லட்சம் காலியிடம் - EDUNTZ

Latest

Search Here!

Friday, 30 July 2021

மத்திய அரசு பணிகளில் 8¾ லட்சம் காலியிடம்

கடந்த ஆண்டு மார்ச் 1-ந்தேதி நிலவரப்படி, மத்திய அரசு பணிகளில் 8 லட்சத்து 72 ஆயிரம் காலியிடங்கள் இருந்ததாக மாநிலங்களவையில் மத்திய மந்திரி தெரிவித்தார். 

 வெளிநாட்டுக்கு தடுப்பூசி நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய சிவில் விமான போக்குவரத்து ராஜாங்க மந்திரி வி.கே.சிங் அளித்த பதில் வருமாறு:- கடந்த ஜனவரி 12-ந்தேதி முதல் இம்மாதம் 22-ந்தேதிவரை சுமார் 42 கோடியே 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில், 35 கோடியே 80 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் உள்நாட்டுக்குள்ளும், 6 கோடியே 40 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார். விமான நிலைய வருவாய் மற்றொரு கேள்விக்கு வி.கே.சிங் கூறியதாவது:- 

 டெல்லி, பெங்களூரு, மும்பை, ஐதராபாத், நாக்பூர் ஆகிய விமான நிலையங்களை பொது-தனியார் கூட்டு அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் இயக்கி வருகின்றன. அந்த விமான நிலையங்கள் மூலம் கடந்த 2020-2021 நிதியாண்டுவரை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு ரூ.30 ஆயிரத்து 69 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு பணியாளர் நலத்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- 

 காலியிடங்கள் கடந்த ஆண்டு மார்ச் 1-ந்தேதிப்படி, அனைத்து மத்திய அரசு துறைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட மொத்த பணியிடங்கள் 40 லட்சத்து 4 ஆயிரத்து 941 ஆகும். அவற்றில், அன்றைய தேதியில், 31 லட்சத்து 32 ஆயிரத்து 698 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். 8 லட்சத்து 72 ஆயிரத்து 243 பணியிடங்கள் காலியாக இருந்தன. கடந்த 5 ஆண்டுகளில், மத்திய பணியாளர் தேர்வாணையம் 25 ஆயிரத்து 267 ஊழியர்களையும், பணியாளர் தேர்வாணையம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 601 பேரையும், ரெயில்வே தேர்வு வாரியம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 945 பேரையும் தேர்வு செய்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment