புதிய தனியுரிமை கொள்கை நிறுத்தி வைப்பு ‘வாட்ஸ்அப்’ அறிவிப்பு - EDUNTZ

Latest

Search here!

Saturday 10 July 2021

புதிய தனியுரிமை கொள்கை நிறுத்தி வைப்பு ‘வாட்ஸ்அப்’ அறிவிப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ‘வாட்ஸ்அப்’ நிறுவனம் புதிய தனியுரிமை கொள்கையை அறிவித்தது. அதில், வாட்ஸ் அப்பில் வெளியிடப்படும் தகவல்கள், அதன் தாய் அமைப்பான பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் இடம்பெற்று இருந்தன. 

இதை ஏற்காதவர்களின் செயல்பாடுகள் குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு எழுந்தநிலையில், இந்திய போட்டி ஆணையம் என்ற சட்டப்பூர்வ அமைப்பு, இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டது. அதற்கு தடை விதிக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் வாட்ஸ்அப் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. ஆனால், அதை விசாரித்த ஒற்றை நீதிபதி தடை விதிக்க மறுத்து விட்டார். 

இதையடுத்து, வாட்ஸ்அப், பேஸ்புக் நிறுவனங்கள் அதே கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. அம்மனு, தலைமை நீதிபதி டி.என்.பட்டேல் உள்ளிட்ட இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வாட்ஸ்அப் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே கூறியதாவது:- மத்திய அரசு, தரவு பாதுகாப்பு மசோதா கொண்டுவரும் பணியில் உள்ளது. அந்த மசோதா அமலுக்கு வரும்வரை, எங்களது தனியுரிமை கொள்கையை நிறுத்தி வைக்க நாங்களாக முன்வந்து சம்மதித்துள்ளோம். அதுவரை அந்த கொள்கையை ஏற்குமாறு பயனாளர்களை வற்புறுத்த மாட்டோம். அதை ஏற்றுக்கொள்ளாத பயனாளர்களின் செயல்பாடுகளை குறைக்க மாட்டோம். இருப்பினும், இந்த கொள்கை குறித்த அறிவிப்பு, வாட்ஸ் அப்பில் தொடர்ந்து இடம்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment