வேளாண் படிப்பு கருத்தரங்கு அம்ரிதா நிறுவனம் ஏற்பாடு - EDUNTZ

Latest

Search here!

Tuesday 6 July 2021

வேளாண் படிப்பு கருத்தரங்கு அம்ரிதா நிறுவனம் ஏற்பாடு

வேளாண் படிப்பு கருத்தரங்கு அம்ரிதா நிறுவனம் ஏற்பாடு 

வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு துறையின் படிப்புகள் குறித்து மாணவர்கள் மற் றும் பெற்றோர் தெரிந்து கொள்ளும் வகையில், அம்ரிதா பல்கலை சார்பில் சிறப்பு 'ஆன்லைன்' கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, அப்பல்கலை வெளியிட்ட செய் திக்குறிப்பு: கோவை அம்ரிதா ஸ்கூல் ஆப் அக்ரிகல்சுரல் சயின்ஸ் என்ற வேளாண் அறிவியல் கல்வி நிறுவ னம் சார்பில் ஆன்லைன் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி, 8ம் தேதி பிற்பகல் 2:00 மணிக்கு https://zcmp.in/VIIN என்ற இணையதளம் வழியே நடத்தப்படுகிறது. 

இந்திய தொழில் கூட்டமைப்பின் வேளாண் குழு தலைவர் விஜய் சர்தானா, கல்வி ஆலோ சகர் மற்றும் கேரள கால்நடை, விலங்கு அறிவி யல் பல்கலையின் தொழில் முனைவோர் பிரிவு முன்னாள் இயக்குனர் டாக்டர் சேதுமாதவன் ஆகியோர் வேளாண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கின்றனர். கேரள வேளாண் பல்கலையின் வனவியல் கல்லுாரி முன்னாள் முதல்வர் சுதாகரா, பார்ம் டெக் கன்சல் டென்சி நிர்வாக இயக்குனர் மற்றும் டெக் பார்மிங் இன்டர்நேஷனல் பொது மேலாளர் முரளி மனோகர் பங்கேற்க உள்ளனர். 

மேலும், அம்ரிதா வேளாண் அறிவியல் கல்வி நிறுவன பேராசிரியர் சுதீஷ் மணலில் ஆகியோர் பங்கேற்று, மாணவர்களுக்கு தேவையான தக வல்களை வழங்க உள்ளனர். வேளாண் அறிவியலின் எதிர்கால வேலை வாய்ப்புகள், பி.எஸ்சி., ஹானர்ஸ் படிப்பின் முக்கியத்துவம் குறித்து, குழு விவாதமும் இடம் பெறும். மாணவர்கள் மற்றும் பெற்றோரின் சந் தேகங்களுக்கும் விளக்கம் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment