கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, மத்திய அரசின் தேசிய அளவிலான தேர்வில் பங்கேற்க பள்ளி மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வாயிலாக, 'கிேஷார் வாக்யானிக் புரோட்சகான் யோஜனா' எனும் தேசிய அளவிலான தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை அடிப்படையாகக்கொண்டு, விண்ணப்பதாரர்களுக்கு பி.எச்.டி., வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.அறிவியல் மற்றும் கணிதத்தின் கட்டாய பாடங்களுடன், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 2021-22ம் கல்வியாண்டில், 11ம் வகுப்பில், அறிவியல் பிரிவு சேர உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.குறைந்தபட்சம், 10ம் வகுப்பில், 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், நடப்பு கல்வியாண்டில் அறிவியல் பிரிவில் பயிலும் மற்றும் தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.குறைந்தபட்சம், 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதன்படி, விண்ணப்பதாரர்கள், http://www.kvpy.iisc.ernet.in/ என்ற இணையதளம் வாயிலாக, விண்ணப்பிக்கலாம்.அதில், தங்களின் கல்வி விவரங்கள், புகைப்படம், கையொப்பம் மற்றும் பிற சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு, கிரெடிட் கார்டு, ஏ.டி.எம்., டெபிட் கார்டு அல்லது நெட்பேங்கிங் சேவை ஆகியவற்றை பயன்படுத்தி கட்டணம் செலுத்த வேண்டும்.இந்த தேர்வு, நவ., 7 ம் தேதி, ஆன்லைனில், குறிப்பிட்ட தேர்வு மையங்களில் நடத்தப்படுகிறது. வரும், 25ம் தேதி, விண்ணப்பிக்க, கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என, உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
Search here!
Wednesday 14 July 2021
New
கல்வி உதவித்தொகை பெற வேண்டுமா? தேர்வில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு
About Admin
அனைவருக்கும் வணக்கம். இந்த தளத்தில் (eduntz) கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகள் தினம்தோறும் பதிவு செய்யப்படுகிறது. படித்துப் பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Scholarship
Tags
Scholarship
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment