தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படுவது எப்போது? அமைச்சர் பொன்முடி பதில் - EDUNTZ

Latest

Search here!

Wednesday 14 July 2021

தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்படுவது எப்போது? அமைச்சர் பொன்முடி பதில்



தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்துவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தென் இந்தியாவின் ஆஸ்திரேலிய தூதரக அதிகாரி சாரா கிர்லூ, துணை தூதரக அதிகாரி மைக்கேல் கோஸ்டா, ஆன்ட்ரு கோலிஸ்டர், தூதரக அதிகாரி (வர்த்தகம்) முனீஸ் சர்மா ஆகியோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் டி.கார்த்திகேயன் உடன் இருந்தார். ஆலோசனை கூட்டத்துக்கு பின்பு அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:- முதல்-அமைச்சரின் ஆணைப்படி உயர்கல்வித்துறையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகளுடன் உயர்கல்வி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற்றது. உயர்கல்வித்துறை வளர்ச்சிக்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்வோம். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் ஆகஸ்டு 1-ந் தேதி திட்டமிட்டபடி தொடங்கும். தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முதல்-அமைச்சர் முடிவு செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment