சட்டப்படிப்பு செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடக்கும் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறிவிப்பு - EDUNTZ

Latest

Search here!

Wednesday 14 July 2021

சட்டப்படிப்பு செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடக்கும் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் அறிவிப்பு

கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம், தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டப்பள்ளி மற்றும் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகளில் வழங்கி வரும் இளநிலை, முதுநிலை சட்டப்படிப்புக்கான தேர்வுகளை ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஆன்லைன் வாயிலாக நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான தேர்வு அட்டவணை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டு, கடந்த மாதம் 30-ந் தேதி முதல் கடந்த 7-ந் தேதி வரை மாணவர்களிடம் இருந்து தேர்வு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இது தொடர்பாக பெயரளவு பட்டியல், வீடியோ வடிவிலான ஆன்லைன் தேர்வுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் மாதிரி தேர்வு தொடர்பான தகவல்கள் பல்கலைக்கழக இணையதளமான www.tndalu.ac.in-ல் 15-ந் தேதி (நாளை) வெளியிடப்படுகிறது. மாணவர்களின் தகவல்களுக்காக ஆன்லைன் தேர்வு தொடர்பான கேள்விகளுக்கு பல்கலைக்கழக இணையதளத்தில் கிடைக்கப்பெறும் ஒருங்கிணைப்பாளர்களை தொடர்புகொள்ளுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேற்கண்ட தகவல் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment