தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி - EDUNTZ

Latest

Search here!

Wednesday 14 July 2021

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். கொரோனா தொற்று பரவல் திருச்சியை அடுத்த திருவெறும்பூரில் எம்.எல்.ஏ. அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- புதுச்சேரியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 16-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழகத்தில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துக்களை முதல்-அமைச்சரிடம் கொண்டு சேர்த்து தற்போதுள்ள கொரோனா தொற்று பரவல் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் முதல்-அமைச்சர் என்ன வழி வகை கூறுகிறாரோ அதன்படி பள்ளிகள் திறக்கப்படும். மாணவர்கள் சேர்க்கை ஒரு வாரத்துக்கு முன்பு எடுத்த கருத்துக்கணிப்பின்படி தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளியில் 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். இது நடப்பாண்டில் அதிகமாக இருக்கும். அப்படி வரும் மாணவர்களை தக்க வைத்துக்கொள்ள போதுமான கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நீட் பயிற்சி கடந்த செப்டம்பர் மாதம் 9-ந்தேதி முதல் நடந்து கொண்டிருக்கிறது. அரசின் நிலைப்பாடு நீட் வேண்டாம் என்பது தான். தமிழகத்திற்கு நீட் விலக்கு என்பதில் திட்டவட்டமாக உள்ளோம். கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி முதல் ஜே.இ.இ. போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. முதல்-அமைச்சர் கூறியதுபோல் தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு பெறுவது தான் எங்கள் இலக்கு. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி 17 சதவீத இடைநிற்றலை 5 சதவீதமாக குறைப்பது தான் எங்களது இலக்கு. பெற்றோருக்கு தைரியம் வேண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி பலர் வேலைக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய நிலையில் முதல்-அமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கிறாரோ அதன்படி செயல்படுவோம். கொரோனா கட்டுப்பாட்டில் இருந்தால் பள்ளிகள் திறப்புக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. மாணவர்களை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோருக்கு தைரியம் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment