மும்பை:எஸ்.பி.ஐ., வங்கி, அதன் டிஜிட்டல் தளமான, ‘யோனோ’வின் அடுத்த பதிப்பை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக, வங்கியின் தலைவர் தினேஷ் காரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது:யோனோ டிஜிட்டல் தளத்தை அறிமுகம் செய்த பிறகான பயணத்தில், அதன் சர்வதேச நடவடிக்கைகளுக்கான திறனை எஸ்.பி.ஐ., உணர்ந்து கொண்டுள்ளது.வங்கியிடம் சிறிய அளவிலான செயல்பாடுகளும் உள்ளன. அவற்றுக்கான யோனோ வணிகத்தின் பயனை எண்ணிப் பார்க்க வேண்டும். தற்போது அதை விவசாயப் பிரிவிற்காகவும் பயன்படுத்தத் தவங்கி உள்ளோம்.
இப்போது, துண்டு துண்டாக இருக்கும் யோனோவின் பயன்பாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில், ‘யோனோ – 2’ எனும் அடுத்த பதிப்பை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். விரைவில் அதை அறிமுகம் செய்ய உள்ளோம்.
கடந்த மார்ச் மாத நிலவரப்படி, யோனோ செயலியின் பதிவிறக்கம் 7.96 கோடியாக உயர்ந்துள்ளது. 3.71 கோடி பேர் தங்களை அதில் பதிவு செய்துள்ளனர். யோனோவில் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 40 ஆயிரமாக உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Search here!
Sunday, 18 July 2021
New
எஸ்.பி.ஐ., செயலி ‘யோனோ’வின் அடுத்த பதிப்பு தயாராகிறது
About Admin
அனைவருக்கும் வணக்கம். இந்த தளத்தில் (eduntz) கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகள் தினம்தோறும் பதிவு செய்யப்படுகிறது. படித்துப் பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Bank
Tags
Bank
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment