ஓய்வூதியம் பெறுவோருக்கு அவர்களது ஓய்வூதிய தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டவுடன், அது குறித்த விவரங்களை குறுந்தகவல், இ-மெயில், வாட்ஸ்அப் மூலம் தெரியப்படுத்துமாறு வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஓய்வூதியதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த சமூக வலைத்தள வசதிகளை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. ஓய்வூதியம் வங்கிக்கணக்கில் வரவு வைத்தவுடன், ஓய்வூதிய சீட்டை உடனடியாக அனுப்புமாறு அறிவுறுத்தி உள்ளது.
இந்த சீட்டில், வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள மாதாந்திர ஓய்வூதிய தொகை, வரி விலக்குகள் (இருந்தால்) உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
ஓய்வூதியம் வழங்கும் வங்கிகளின் ஓய்வூதிய செயலாக்க மையங்களுடன் கடந்த மாதம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஓய்வூத்தியத்துறை கூறியுள்ளது.
இதன் மூலம் ஓய்வூதியம் குறித்த விவரங்களை வாட்ஸ்அப் மூலமும் பயனாளிகள் இனிமேல் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Search here!
Friday 16 July 2021
New
ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதிய விவரங்களை வாட்ஸ்அப் மூலமும் பெறலாம் மத்திய அரசு அறிவிப்பு
About Admin
அனைவருக்கும் வணக்கம். இந்த தளத்தில் (eduntz) கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகள் தினம்தோறும் பதிவு செய்யப்படுகிறது. படித்துப் பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Pension
Tags
Pension
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment