உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்து இணையவழி திறன் பயிற்சி - EDUNTZ

Latest

Search here!

Wednesday 14 July 2021

உயர்கல்வி, வேலைவாய்ப்பு குறித்து இணையவழி திறன் பயிற்சி

உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் குறித்து இணைய வழி திறன் பயிற்சிகளில் இளைஞர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார். தொழில் நெறிகாட்டும் மையம் இளைஞர்கள், மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் குறித்து தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டும் மையம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த மையத்தின் மூலம் மாணவ-மாணவிகளுக்கு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகள் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் வழங்கப்படுகின்றன. இதுபோல் தனியார்துறை வேலை வாய்ப்பும் முகாம்கள் மூலம் இளைஞர்கள்-இளம்பெண்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திறன் விழிப்புணர்வு வாரம் இதுதொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை மாதம் 2-வது வாரம் தொழில்நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த 12-ந் தேதி தொழில்நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு வார நிகழ்ச்சிகள் ஈரோடு மாவட்டத்தில் தொடங்கின. இது தொடர்பான நிகழ்ச்சிகள் அனைத்தும் வெபினார் (Webinar) எனப்படும் இணையவழி வகுப்புகளாக நடந்தன. நேற்று திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் உயர் கல்வி, போட்டித்தேர்வுகள், தனியார் துறை வேலை வாய்ப்பு, சுயவேலைவாய்ப்பு ஆகியவை குறித்து திறன் பயிற்சிகள் வெபினார் வாயிலாக நடத்தப்பட்டது. இதில் கல்லூரி மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம் இன்று (புதன்கிழமை) ஈரோடு மாவட்ட சமூக நலத்துறையுடன் இணைந்து 3-ம் பாலினத்தவர்களுக்கு திறன் பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வெபினார் மூலம் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பல்வேறு தொழில்நுட்ப அறிவுடன் பணிகள் செய்து வருபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு திறன் விழிப்புணர்வு பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஈரோடு மற்றும் கோபி அரசு தொழில்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான தொழில்நெறி காட்டும் பயிற்சி வெபினார் மூலம் நடத்தப்படுகிறது. இதுபற்றிய விவரங்களை www.tnskill.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து இளைஞர்கள், மாணவ-மாணவிகள் பங்கு கொள்ளலாம். இந்த தகவல்கள் ஈரோடு மாவட்டகலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment