தொழில் முனைவோர் திட்டத்தில் மீன் வளர்க்க விருப்பமா? விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அறிவிப்பு - EDUNTZ

Latest

Search here!

Thursday 1 July 2021

தொழில் முனைவோர் திட்டத்தில் மீன் வளர்க்க விருப்பமா? விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அறிவிப்பு

மீன் வளர்ப்போர் தொழில்முனைவோர் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். மீன் வளர்ப்போர் தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்யும் வகையில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கான தொழில்முனைவர் மாதிரி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 

மீனவர்கள், மீன் வளர்ப்போர், சுய உதவிக்குழுக்கள், கூட்டு பொறுப்பு குழுக்கள், மீன் வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள், தனிநபர் தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள் இந்த திட்டத்தில் பயன் பெறலாம். விண்ணப்பிக்கலாம் பொதுப்பிரிவினருக்கு 25 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானிய தொகையின் உச்சவரம்பு ரூ. 1 கோடியே 25 லட்சம்), ஆதிதிராவிடர், பழங்குடியினர், மகளிருக்கு 30 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும் (மொத்த திட்ட மதிப்பீட்டில் மானியத்தொகை உச்சவரம்பு ரூ.1 கோடியே 50 லட்சம்) வழங்கப்படும். 

 இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர் நல துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் வருகிற 31-ந் தேதி ஆகும். மீன்வள ஆய்வாளர் அலுவலகம் மேலும் கூடுதல் விவரங்களை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம். விருப்பமுள்ளவர்கள் நல்லதங்காள் ஓடை அணை, கோனேரிப்பட்டி, தாராபுரத்தில் இயங்கும் மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். 0424 2221912 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment