போலீஸ் வேலைக்கு 'ப்ரீ' உடல் தகுதி பயிற்சி : எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர் பங்கேற்கலாம் - EDUNTZ

Latest

Search here!

Wednesday 14 July 2021

போலீஸ் வேலைக்கு 'ப்ரீ' உடல் தகுதி பயிற்சி : எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர் பங்கேற்கலாம்

காவலர், தீயணைப்புத்துறை , சிறை காவலர் காலியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வுக்கு இலவச பயிற்சி, மாவட்ட வேலைவாய்ப்பு தரப்பில் அளிக்கப்படவுள்ளது. எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள், இதில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு குழுமத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், மற்றும் தீயணைப்பாளர்கள் பதவிகளுக்கான எழுத்து தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.நடப்பாண்டில், 10,906 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அடுத்த கட்ட உடல் கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு, உடல் திறன் போட்டி, வரும் 26ம் தேதி, நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு, 1:5 விகிதத்தில் கலந்து கொள்ள, தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் தேர்வுக்குழும இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மேலும் விபரங்களை, www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். அடுத்த கட்ட உடல் தகுதி தேர்வுகளில் வெற்றி பெற, இலவச பயிற்சி 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை மாவட்ட வேலைவாய்ப்பு துறை சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள், 98423-18081 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு, விபரங்களை அனுப்பி பதிவு செய்துகொள்ள வேண்டும்.தேர்வு நுழைவுச்சீட்டுடன் 16ம் தேதி காலை, 10:00 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பங்கேற்க, மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அதிகாரி ஜோதிமணி அறிவுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment