விதை என்பது ஒரு உயிர்ப்பெட்டகம். மண்ணால் உயிர்ப்பெற்று வளரக்கூடியது. பஞ்சம் பாதித்த காலத்தில்கூட விதையை உண்ண மறுத்து, உயிர் துறந்தவர்கள் குறித்து நம் வரலாறு பதிவு செய்துள்ளது. அடுத்த தலைமுறைக்கு விதையை விட்டுச் செல்வதற்காக உயிர் நீத்த பரம்பரை நம்முடையது.
இப்படி உயிரைத்துறந்து காப்பாற்றிய விதைகளுக்கு எப்படி விலை நிர்ணயிக்க முடியும்? 10 ஆண்டுகளுக்கு முன்புவரை நம் ஊர் உழவர்கள் விளைவிக்கும் விதைக்கு விலை நிர்ணயிக்கப்படவில்லை. வியாபார பண்டமாக விதை இருக்கவில்லை.
எல்லாவற்றையும் செழிப்புறச் செய்யும் வித்தையை கற்றிருந்த நம் பெண்களின் கைகளில் விதை பாதுகாக்கப்பட்டு, அடுத்தடுத்த பருவத்துக்காக சேமிக்கப்பட்டது. ஒருவருக்கு விதை தேவைப்பட்டால், அடுத்தவருக்கு பரிமாறிக் கொள்வதாக மட்டுமே அது இருந்தது. அப்படி இல்லாத நிலையில் ஒரு விதைக்கு மற்றொரு விதை பண்டமாற்றாகக் கொடுக்கப்பட்டது. பின்னாட்களில் விலை நிர்ணயிக்க வேண்டி வந்தபோதும்கூட, கொள்ளை லாப விலை நிர்ணயிக்கப்படாமல் நியாய விலையிலேயே விதை சந்தைப்படுத்தப்பட்டது.மேலை நாட்டின் நிறுவனங்கள் விதையை விற்பதற்காக நம் நாட்டில் நுழைந்தபோது, மீண்டும் முளைக்காத, மீண்டும் பயன்படுத்த முடியாத சோதா விதைகளாக வந்தன. அதன் காரணமாக, மீண்டும் மீண்டும் தனியார் நிறுவனத்தை சார்ந்திருக்க வேண்டிய சந்தைப் பொருளாக விதை மாற்றப்பட்டது. உழவனுக்கும் உணவுக்கும் ஆதாரமாக இருந்த விதை வியாபாரமாக, பெரும் லாபம் அளிக்கும் விற்பனை பண்டமாக நம் மீது திணிக்கப்படுவதை இன்றைக்கு பார்க்கிறோம்.
இப்படி நம் விதை பறிபோவது சமீபத்திய விவகாரம் அல்ல. நமது மிகப்பெரிய சொத்தாகத் திகழ்ந்த பாரம்பரிய விதை வளம் அழிக்கப்பட்டு, சில நிறுவனங்களின் விதை மட்டுமே சந்தையை ஆக்கிரமித்து இருக்கும் மோசமான நிலைக்கு நம்முடைய வேளாண்மை தள்ளப்பட்டு உள்ளது.காப்புரிமை என்ற பெயரில் நம் பாரம்பரிய பொருட்களான வேம்பு முதல் மஞ்சளின் பல்வேறுபட்ட பயன்பாடுகளை மொத்தமாக விழுங்க அநீதிகள் நடந்தன. மேலும் தாவர-உயிரினப் பன்மையை முற்றிலும் சீரழிக்கும் மரபணு மாற்று விதைகள் அறிமுகத்தால், நமது பாரம்பரிய விதைகள் மீதும், உழவர்கள் மீதும் நெருக்கடிகள் திணிக்கப்படுகின்றன, என்பதில் சந்தேகமில்லை. விதை என்றால் உயிர் வித்து, உயிர் காக்க உணவூட்டும் பொருள் என்பதெல்லாம் போய், வெறும் சந்தைப்பண்டமாகி விட்டது. இதனால் பேரிழப்பைச் சந்தித்தவர்கள் உழவர்கள் மட்டுமே. அதே போல் விவசாயமும் நெருக்கடி உள்ளாகிவிட்டது. விதை என்பது உழவின்-உயிரின் அடிப்படை. அதை நாம் இழந்தால் எல்லாவற்றையும் இழந்து விடுவோம் என்பதே உண்மை.
Search here!
Saturday 17 July 2021
New
தினம் ஒரு தகவல் : விதையை இழந்ததால் விவசாயத்துக்கு நெருக்கடி
About Admin
அனைவருக்கும் வணக்கம். இந்த தளத்தில் (eduntz) கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகள் தினம்தோறும் பதிவு செய்யப்படுகிறது. படித்துப் பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தினம் ஒரு தகவல்
Tags
தினம் ஒரு தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment