ஒலிம்பிக் போட்டி விநாடி வினா: மாணவர்கள் பங்கேற்க யுஜிசி அறிவுறுத்தல் - EDUNTZ

Latest

Search here!

Friday 16 July 2021

ஒலிம்பிக் போட்டி விநாடி வினா: மாணவர்கள் பங்கேற்க யுஜிசி அறிவுறுத்தல்

ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு நடத்தப்படவுள்ள விநாடி வினா போட்டியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஜூலை 23 முதல் செப். 5-ம் தேதி வரை டோக்கியோவில் நடைபெறவுள்ளது. இதையடுத்து இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து விநாடி வினா போட்டி உட்பட பல்வேறுசெயல்பாடுகளை முன்னெடுத்துள்ளன. இந்த போட்டிகளில் நாடு முழுவதும் யுஜிசியின் கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். இதில் கடந்த ஒலிம்பிக் போட்டிகள், தற்போதைய ஒலிம்பிக் போட்டி குறித்த வினாக்கள் இடம்பெறும். இந்த போட்டியில் பங்கேற்பதற்கான விதிமுறைகள், பதிவு செய்தல் உட்பட முழு விவரங்களை யுஜிசி இணையதளத்தில் (www.ugc.ac.in) அறிந்து கொள்ளலாம். எனவே, விநாடி வினா போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்பதற்கான அறிவுறுத்தல்களை உயர்கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment