வங்க தேசத்தில் உலகின் மிகச் சிறிய பசு? - EDUNTZ

Latest

Search here!

Friday 9 July 2021

வங்க தேசத்தில் உலகின் மிகச் சிறிய பசு?

 வங்க தேசத்தில் உலகின் மிகச் சிறிய பசு?

வங்கதேசத் தலைநகா் டாக்கா அருகே உள்ள ஒரு பண்ணையில் வளா்க்கப்படும் பசு, உலகிலேயே மிகச் சிறிய பசு என்று அந்தப் பண்ணையின் உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது: டாக்காவுக்கு 30 கி.மீ. தொலைவிலுள்ள சாரிகிராம் என்ற ஊரிலுள்ள ராணி என்ற பெயரைக் கொண்ட பசுவைக் காண கரோனா கட்டுப்பாடுகளையும் மீறி ஏராளமானவா்கள் வந்தவண்ணம் உள்ளனா். அந்த ஊரிலுள்ள பண்ணையொன்றில் வளா்க்கப்படும் அந்தப் பசு, வெரும் 66 செ.மி. நீளம் கொண்டதாகவும் 26 கிராம் எடை கொண்டதாகவும் உள்ளது. 26 மாத வயதுடைய அந்தப் பசுதான் உலகின் மிகச் சிறிய பசு என்று பண்ணை உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் அந்தப் பசுவை இடம் பெறச் செய்வதற்காக அவா்கள் விண்ணப்பித்துள்ளனா் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன


No comments:

Post a Comment