உலக புலிகள் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கலை போட்டிகளை வனத்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர். கலை போட்டிகள் உலக புலிகள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் சார்பில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் பகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் போட்டிகள் நடத்தப்பட்டது. 

இதில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டு இருந்தது. புலி தொடர்பான நடனம், ஓவியம், மாறுவேடம் உள்பட பல்வேறு பிரிவுகளில் கலை போட்டிகள் நடத்தப்பட்டது. அதன்படி வீடியோ மற்றும் புகைப்படம் ஆகியவற்றை மாணவ-மாணவிகள் அனுப்பி வைத்திருந்தனர். குறிப்பாக முதுமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள கார்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்தியது 

வனத்துறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. பரிசுகள் தொடர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். சிறந்த படைப்புகளை அனுப்பிய முதல் 3 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆன்லைன் மூலம் சான்றிதழ்கள் அனுப்பப்பட உள்ளது. 

இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பத்மா கூறுகையில், போட்டிகளில் சுமார் 320 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் 290 பேர் ஓவியங்கள் வரைந்து அனுப்பி உள்ளனர். ஆதிவாசி குழந்தைகள் படிக்கும் கார்குடி அரசு பள்ளியில் இருந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்தனர் என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!