அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது: பொதுத்துறை வங்கிகளுக்கான பணியாளர்களைத் தேர்வு செய்யும், இந்திய வங்கி பணியாளர் தேர்வு மையம் அண்மையில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதில், யூனியன் வங்கியின் காலி பணியிடங்கள் அறிவிப்பில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 147 காலி பணியிடங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், இந்த இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 இடஒதுக்கீட்டின்படி, 40 இடங்கள் என்பதற்குப் பதிலாக பூஜ்யம் என குறிப்பிடப்பட்டுள்ளது. உயர் ஜாதி ஏழை பிரிவில் 10 சதவீதம் இடஒதுக்கீட்டில் 14 இடங்களுக்குப் பதிலாக 21 இடங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, தெலங்கானா உள்ளிட்ட 8 மாநிலங்களில் இடஒதுக்கீட்டின் கீழ், ஒதுக்கப்பட வேண்டிய காலி பணியிடங்கள் ஒதுக்கப்படவில்லை. 320 காலி பணியிடங்கள் வேறு பிரிவினருக்கு செல்வ தால், பிற்படுத்தப்பட்டோருக்கான வாய்ப்பு மறுக்கப்படு கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Search here!
Saturday 17 July 2021
New
பொதுத்துறை வங்கிகளில் : கிளார்க் பணியிடங்கள் அறிவிப்பு
About Admin
அனைவருக்கும் வணக்கம். இந்த தளத்தில் (eduntz) கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகள் தினம்தோறும் பதிவு செய்யப்படுகிறது. படித்துப் பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Bank
Tags
Bank
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment