தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழக ஊழியர் ஓய்வூதிய நிதி அறக்கட்டளை நிர்வாகிக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
1998-ம் ஆண்டில் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டம் 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதியில் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் அனைத்து போக்குவரத்து கழக ஊழியர்களும் பயனடையும் வகையில் 1998-ம் ஆண்டில் இருந்த ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கான முன்மொழிவை அரசுக்கு அனுப்பி வையுங்கள்.
அதனுடன், இதில் எத்தனை பயனாளிகள் பயனடைவர் என்ற தகவலையும், அந்த ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தினால் எவ்வளவு செலவாகும் என்ற விவரத்தையும் கணக்கிட்டு அனுப்ப வேண்டும். இந்த கடிதத்தை மிகவும் அவசரம் வாய்ந்த கடிதமாக கருத வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Search here!
Saturday 17 July 2021
New
போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகிறதா? முன்மொழிவு கேட்டு தமிழக அரசு கடிதம்
About Admin
அனைவருக்கும் வணக்கம். இந்த தளத்தில் (eduntz) கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகள் தினம்தோறும் பதிவு செய்யப்படுகிறது. படித்துப் பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
General News
Tags
General News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment