பள்ளிகள் திறக்காததால், பழங்குடி மாணவர்களுக்காக, நடமாடும் கல்வி கற்பிக்கும் திட்டத்தை, விரைவில் துவங்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்காததால், மலை கிராம குழந்தைகள், பெரிதும் சிரமப்படுகின்றனர். பெற்றோருடன் சேர்ந்து பலர், வேலைக்கு செல்ல துவங்கிவிட்டதால், இடைநிற்றல் ஏற்படும் நிலை உள்ளது.இப்பகுதிகளில் 'நெட்வொர்க்' பிரச்னை இருப்பதால், ஆன்லைன் வழியாக வகுப்புகள் எடுப்பதில், சிக்கல் தொடர்கிறது. இதனால், கோவை உள்ளிட்ட, 18 மாவட்டங்களில் உள்ள, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கு, நடமாடும் கல்வி கற்பிக்கும் திட்டத்தை துவங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு, வாகனத்தில் சென்று, வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வகுப்பு நடத்த, ஏற்கனவே நியமித்த சிறப்பாசிரியர்களை பயன்படுத்தி கொள்ளவும், வாகனம் செல்லும் இடங்கள் குறித்து, பள்ளி தலைமையாசிரியர்கள் கால அட்டவணை தயாரிக்க வேண்டுமெனவும், பழங்குடி நலத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
Search here!
Wednesday 14 July 2021
New
பழங்குடி குழந்தைகளுக்கு நடமாடும் கல்வி திட்டம்
About Admin
அனைவருக்கும் வணக்கம். இந்த தளத்தில் (eduntz) கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகள் தினம்தோறும் பதிவு செய்யப்படுகிறது. படித்துப் பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Education News
Tags
Education News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment