செய்தி வெளியீடு எண்:435
நாள்:13.07.2021
செய்தி வெளியீடு
“நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் அரசின்
நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் அமைய வேண்டும்”
கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை ஆய்வுக் கூட்டத்தில்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுரை.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்
தலைமையில்
இன்று (13.07.2021) தலைமைச் செயலகத்தில், கைத்தறி,
கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறையின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வேட்டி,
கைத்தறி மற்றும் துணிநூல்
இக்கூட்டத்தில் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடித்
திட்டங்களான
சேலை வழங்கும் திட்டம் மற்றும் பள்ளி
மாணாக்கர்களுக்குச் சீருடை வழங்கும் திட்டம் குறித்தும், நெசவாளர்களின்
வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திடும் வகையில் அவர்களுக்குத் தொடர்
வேலைவாய்ப்பு அளிப்பது குறித்தும், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித்
திட்டங்கள்
அனைத்தும்
நெசவாளர்களுக்குச் சென்றடைய உரிய
அறிவுரைகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
துறையின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள்
குறித்தும், துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் இதர நிறுவனங்களின்
செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
கோ- ஆப்டெக்ஸ்
கோ- ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய அணுகுமுறையாக, பாரம்பரியத்தை
இளையதலைமுறைக்குக் கொண்டுசேர்ப்பது, அனைத்து வயதினருக்கும் ஏற்ற
கைத்தறி ஆடைகளை வடிவமைப்பது, ஒருங்கிணைந்த விற்பனை வளாகங்களை
உருவாக்குவது, கைத்தறியை உயர் வருவாய் பிரிவினரிடம் கொண்டு
செல்வதன் மூலம் நெசவாளர்களின் வருமானத்தை உயர்த்துவது, அரசு
ஊழியர்கள் வாரம்
இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகளை உடுத்த
அறிவுறுத்துவது, தமிழ்நாட்டின் நெசவிற்கு ஒரு வணிகப் பெயரை (Branding)
உருவாக்குவது போன்ற அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்த மாண்புமிகு
முதலமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார். தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம்
பாரம்பரியம்
மாறாமல் கதர் பட்டு உற்பத்தியில் புதுமையான
வடிவமைப்புகளை அறிமுகப்படுத்த ஏதுவாகப் பட்டு நெசவாளர்களுக்குத் திறன்
மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கவும், மேலுறைப் பெட்டிகளில் வடிவமைப்பு மற்றும்
பல வண்ணக் கலவைகளில்
புதுமைகளைப் புகுத்தி சோப்பு, தேன் மற்றும்
இதர பொருட்களை மக்களைக் கவரும் வகையில் மாற்றம் செய்திட
நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
கதர்
கிராமப் பொருட்களைத் தீவிர சந்தைப்படுத்தும் விதமாகக்
கல்லூரிகள் மற்றும் வர்த்தக மையங்களில் கண்காட்சிகள் (Sales Expo)
அமைத்தல், சிறப்பு அங்காடிகள் (Super Market / Departmental Stores)
மற்றும் பெரிய வணிக வளாகங்களில் (Shopping Mall) தனியே இருப்பு
அடுக்கு அமைத்தல், சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் மூலம்
விளம்பரப்படுத்துதல் மற்றும் தனிச் செயலியை (App) உருவாக்குதல் போன்ற
பணிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழ்நாடு பனைப் பொருள் வளர்ச்சி வாரியம்
கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் ஒரு முயற்சியாகப் பனை
வெல்ல உற்பத்தியினை அதிகரிக்கும் பொருட்டு, சந்தையில் தரமான பனை
வெல்லம் கிடைக்கப்பெறும் வகையில் மாவட்ட பனைவெல்ல உற்பத்தி மற்றும்
விற்பனைக் கூட்டுறவு சம்மேளன அலுவலக வளாகங்களில் பொதுப் பயன்பாட்டு
மையங்கள் நிறுவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment