கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெறும். தேர்வுகள் நாளை மறுநாள் தொடங்குவதாக புதுவை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் கோரிக்கை
புதுவையில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வராததால் கல்லூரி தேர்வுகளை ஆன்லைன் மூலமே நடத்தவேண்டும் என்று மாணவர்கள் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.இதுதொடர்பாக கல்வித்துறை பொறுப்பினை வகிக்கும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் ஆலோசனை நடத்தினார். மேலும் நேற்று முன்தினம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசிய அமைச்சர் நமச்சிவாயம், கல்லூரி தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த துணைவேந்தரிடம் பேசியிருப்பதாகவும், இதுதொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பல்கலைக்கழகம் அறிக்கை
இந்தநிலையில் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் லாசர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் அனைத்தும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த அட்டவணையானது மருத்துவம், பல் மருத்துவ கல்லூரிகளுக்கு பொருந்தாது.
தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெறும். செய்முறை தேர்வுகள் வாய்ப்பு இருந்தால் ஆன்லைன் மூலம் நடைெறும். இல்லாவிட்டல் ஆப்லைனில் (நேரடியாக) நடைபெறும்.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடைத்தாள்கள் இ-மெயில் மூலமாக அனுப்பப்படும். மாணவர்கள் தேர்வுகளை வெள்ளைத்தாளில் கருப்பு மையினால் எழுதவேண்டும். தேர்வு எழுத 3 மணிநேரம் வழங்கப்படும்.
தேர்வு எழுதியபின் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து தேர்வு முடிந்து 30 நிமிடத்துக்குள் கல்லூரிகளுக்கு மாணவர்கள் அனுப்ப வேண்டும். கல்லூரி முதல்வர்கள் அதை பிரிண்ட் அவுட் எடுத்து கல்லூரி முத்திரையுடன் அதேநாளில் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Search here!
Saturday 17 July 2021
New
நாளை மறுநாள் தொடங்குகிறது கல்லூரி தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் புதுவை பல்கலைக்கழகம் அறிவிப்பு
About Admin
அனைவருக்கும் வணக்கம். இந்த தளத்தில் (eduntz) கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகள் தினம்தோறும் பதிவு செய்யப்படுகிறது. படித்துப் பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
College News
Tags
College News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment