அரசு சிறப்பு பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ், பார்வைத் திறன் குறைபாடுடை யோர், செவித்திறன் குறைபாடுடையோர் என, மொத்தம் 22 அரசு சிறப்பு பள்ளிகள் உள்ளன. இவற்றில், 2021 - 22ம் கல்வியாண்டிற்கு, மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இப்பள்ளிகளில், மாணவர்களுக்கு சீருடை, உணவு, தங்கும் இடம் உட்பட, அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளுடன், சிறப்பு பயிற்சி பெற்ற தகுதி வாய்ந்த ஆசிரியர்களால், தரமான கல்வி வழங்கப்படுகிறது.எனவே, பார்வைத்திறன், செவித்திறன் குறைபாடுடைய, கை, கால் இயக்கத் திறன் பாதிக்கப்பட்ட மாணவ -- மாணவியர், 5 வயது முதல், 35 வயதுக்கு உட்பட்ட மனவளர்ச்சி குன்றியவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Search here!
Sunday, 18 July 2021
New
சிறப்பு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
About Admin
அனைவருக்கும் வணக்கம். இந்த தளத்தில் (eduntz) கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகள் தினம்தோறும் பதிவு செய்யப்படுகிறது. படித்துப் பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
Admissions
Tags
Admissions
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment