துரை காமராஜ் பல்கலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் வினாத்தாள் தயாரிப்பு குழு ஜூலை 31 வரை முகாமிட்டு பணிகள் மேற்கொள்ளவுள்ளது.
இதற்காக டி.ஆர்.பி., இயக்குனர் சேதுராமவர்மா தலைமையில் பல்கலை நுாலகம் உள்ளிட்ட பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு பதிவாளர் வசந்தாவிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் கல்லுாரி கல்வி இணை இயக்குனர் முத்துராமலிங்கம், முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.அதிகாரிகள் கூறுகையில் “டி.ஆர்.பி., தேர்வுகளுக்காக வினாத்தாள் தயாரிப்பது தொடர்பான 'கான்பிடன்ஷியல்' பணி இது.
இம்முகாம் வழக்கமாக சென்னையில் நடக்கும். கொரோனாவால் சமூக இடைவெளி கருதி இந்தாண்டு மதுரை உட்பட பிற மாவட்டங்களில் பிரித்து நடத்தப்படுகிறது. பல்கலையில் 150 பேர் பங்கேற்பதற்கான இடவசதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றனர்.
No comments:
Post a Comment