பயோ டெக்னாலாஜி என்பது வளர்ந்து வரும் துறை.
B.Sc. Biotechnology, B.E Biotechnology, B.Tech Biotech என கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பொறியியல் கல்லூரிகளிலும் இப்பிரிவு உள்ளது.
இவற்றில் பிஎஸ்சி படிப்பு மட்டும் மூன்று ஆண்டுகள். மற்ற பி.இ, பி.டெக் படிப்புகள் நான்கு ஆண்டுகள் படிக்க வேண்டியதாக இருக்கும்.
மேலோட்டமாக பார்த்தால் பயோ டெக்னாலாஜி முழுக்க முழுக்க ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட படிப்பு ஆகும். எனவே, வெறும் டிகிரி படிப்பதோடு நின்று விடாமல், பட்டமேற்படிப்பும் படித்தால் மட்டுமே இந்த படிப்பின் முழு மதிப்பையும் பெற முடியும்.
என்ன கல்லூரியில் சேரலாம்?
நீங்கள் தேர்வு செய்திருக்கும் பயோ டெக்னாலாஜி துறையானது, மற்ற படிப்புகளைக் காட்டிலும் அதிக மதிப்புள்ள படிப்பாகும். எனவே, அதற்கு ஏற்றவாறு நல்ல கல்லூரியில் சேர வேண்டும்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில், சென்னை லயோலா கல்லூரி, மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி, பிரெஸிடன்சி கல்லூரி, கோவை பிஎஸ்சி கல்லூரி ஆகியவற்றில் பயோ டெக்னாலாஜி படிப்பு சிறந்த முறையில் வழங்கப்படுகிறது.
பொறியியல் பட்டப்படிப்பு பொருத்தவரை தரமுள்ள (முதல் 30) கல்லூரிகளில் மிக மிக முக்கியம். இது மட்டுமல்லாது நிகர்நிலை பல்கலைக் கழகங்களிலும் பாடப்பிரிவு நடத்தப்பட்டு வருகிறது.
என்னென்ன பாடங்கள் வரும்?
பிஎஸ்சி, பி.இ, பி.டெக் ஆகியவற்றுக்கு ஏற்ப பயோ டெக்னாலாஜி துறைக்கான பாடங்கள் மாறுபடும். இருப்பினும் சில பொதுவான பாடங்களை இங்கு காணலாம்:
Bio-mathematics
Molecular Genetics
Microbial Genetics
Biophysics & Instrumentation
Principles of Transmission Genetics
Animal Biotechnology
Industrial Biotechnology
Medical Biotechnology
Plant Biotechnology
Environmental Biotechnology
உயர்கல்வி:
பயோ டெக்னாலாஜி படித்தால், அதைத் தொடர்ந்து ஐஐடி, என்ஐடி, விஐடி போன்ற உயர்தர கல்வி நிறுவனங்களில் பட்டமேற்படிப்பு படித்தால் நன்றாக இருக்கும். இதற்கு கேட் தேர்வு மூலம் மாணவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். எனவே, நீங்கள் இளநிலை பயோ டெக்னாலாஜி முதலாமாண்டு சேரும் போதே, கேட் தேர்வுக்கும் தயாராகி வர வேண்டும்.
அதே போல், படிக்கும் போது, நல்ல மதிப்பெண் பெற வேண்டும், நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி, சமர்ப்பிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இவ்வாறு முழுக்க முழுக்க உயிர்தொழில்நுட்பத்தில் படிக்கும் போது, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலும் இடங்கள் கிடைக்கும். வேலைவாய்ப்பு:
ஏற்கனவே கூறியபடி, பயோ டெக்னாலாஜி துறையில் உயர்கல்வி, பட்டமேற்படிப்பு படித்தால் மட்டுமே நல்ல நிலைக்கு வர முடியும். இளநிலை பட்டப்படிப்பு
முடித்தால், வேலைவாய்ப்புகள் சற்று குறைவாகவே காணப்படுகிறது. இளநிலை பயோ டெக்னாலாஜி முடித்தால், வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்றவற்றில் மார்கெட்டிங் மேனேஜர், புராடெக்ட் அனாலிஸ்ட் உள்ளிட்ட பணிகளில் சேர முடியும்.
எனவே, பயோ டெக் முடித்த கையோடு நுழைவுத்தேர்வுகள் எழுதி மேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகள் படித்தாலே இந்த துறையில் வெற்றி பெற முடியும்.
No comments:
Post a Comment